பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று காலிகள் சேர்ந்தால் போதும் முளைக்கும் புதிதாய் ஒரு கட்சி; தான்தோன் றிக்குத் தலைவர் பதவி,

தண்டல்கள் செயலர், பொருளாளர்!

முக்கா லிகளோ ஊரை ஏய்த்து ா,ாற்கா லிக்கு மாறுகையில் உட்கா ருவதில் சிக்கல் வந்து ஒருவன் கட்சியை உடைக்கின்றான்!

கட்சித் தாவல் சட்டம் இவனைக் கைது செய்ய முடியாதாம்! கட்சியில் பிரிந்தவன் மூவர் கட்சிக் கணக்கில் மூன்றில் ஒருபங்காம்!

பொருட்பால் இவர்க்கு மனப்பாடம்; பெரும் பொய்கள் இவர்க்குக் குருபீடம்! புரட்டல் அரசியல் கலையாகும்; வெறும் போலிகள், கொள்ளையர் கூடாரம்!

ஆத்திகன் தூக்கும் காவடி போல அரசியல் காவடி இருக்கிறது; நாத்திகன் கூடக் காவடி தூக்கும் நாடகம் இங்கே நடக்கிறது!