பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

qடிை வேடங்கள்!

காலை நேரம்

சாதி ஒழிப்புக் கருத்தரங் குகளில் முழங்குகிறார் இவர் மாலை நேரம்

சாதிச் சங்க

மாநாடுகளைத் தொடங்குகிறார்!

தாலிக் கயிற்றில் சாதிமஞ்சளைத் தடவித் தருவார் மகளுக்கு - தம் தானைத் தொண்டனின் கலப்பு மணத்தில் தலைமை ஏற்பார் புகழுக்கு!

வீதி முனையில்

“ஒன்றே சாதி வேற்றுமை இல்லை என்கின்றார் - தம் வேட்பு மனுவைச்

சாதிப் பெயரில் விண்ணப் பித்துக் கொள்கின்றார்!

சாதிச் சண்டை

சமயக் கலகச் சம்பவங் களுக்குத் துணைபோவார் அவை மோதும் போது

வழியும் குருதியை - முகந்து குடிக்கும் நரியாவார்!