பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெப்பத்தால் பிளந்த பூமி வெடிப்பையே கரைக ளாக்கி உப்புநீர் வியர்வை ஆறு ஒடியே வெடிப்பை மூடும்!

நெற்றியின் நதிகள் ஓடி நிலமங்கை தாகம் தீர்ப்பாள்; வெற்றியின் படியில் பூமி

விளைச்சலைக் கொண்டு சேர்ப்பாள்!

பூமியின் வயிற்றில் தண்ணிப் புதையல்கள் உண்டு தம்பி! பூமியைக் கடைந்தால் போதும் புதியதோர் அமுதம் ஊறும்!

களர்நிலம் கூடத் தோண்டு; கடப்பாரை ஆக்கு கையை! கிளறுவாய் நிலம்மு முக்கக்

கிணறுவாய் திறக்கச் செய்வாய்!

மண்ணடி நீரைப் பாய்ச்ச வழிவிடும் கிணறு கூட

'மண்ணுக்கு மதகு தானே! மனிதாஉன் முயற்சி தானே!