பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீறிய புதுக்கி ணற்றில் கீழுற்று சுரக்கும் முன்பே ஊறிய நெற்றி நீரை ஊற்றுநீ முதல்ஊற் றாக!

ஊற்றுவாய், அதனை வாங்கி உயிர்பெற்றுச் சிலிர்த்த பூமி ஊற்றுவாய் திறக்கும்; இந்த உலகுவாய்ப் பசியைப் போக்கும்!

கடுகாக உன்னை எண்ணிக் கைகொட்டிச் சிரித்த வானம் அடிதேடி உன்னை வாழ்த்த ஆரத்தித் தட்டாய் மாறும்!

ஆமடா! உந்தன் நெற்றி ஆகாயம் ஆன தற்குப் பூமித்தாய் தன்னைச் சின்னப் பொட்டாக்கி இட்டு வைப்பாள்!