பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திண்ணை தானா உன்தேசம்? - உன் தெருவொன் றேயா உன்னுலகம்? திண்ணையை இடித்துத் தெருவாக்கு உன் தெருவை மேலும் விரிவாக்கு

எத்தனை உயரம் இமயமலை! - அதில் இன்னொரு சிகரம் உனதுதலை! எத்தனை ஞானியர் பிறந்ததரை - நீ இவர்களை விஞ்சிட என்னதடை?

பூமிப் பந்து என்னவிலை? - உன் புகழைத் தந்து வாங்கும்விலை! நாமிப் பொழுதே புறப்படுவோம் - வா நல்லதை எண்ணிச் செயல்படுவோம்!