பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்களை உலர்த்து омбабо!

வெற்றியை எட்டும் நோக்கமிருந்தால் ஒற்றைச் சிறகிலும் பறக்கலாம்! உன்னைத் தொற்றிய சோம்பலைத் தூக்கி எறிந்தால் தோள்களில் பூமியை நிறுத்தலாம்!

|எட்டுத் திசைகளிலே

எந்தத் திசை உனதுதிசை? - உன் சுட்டு விரலைக் கேள் சூரியனைக் கேட் காதே!/

சுட்டுவிரல் தொட்டால் அந்தச் சூரியன் கூடச் சுருங்காதா? -உன் கட்டை விரலால் கடைந்தால் அந்தக் கடலும் வானமும் கலங்காதா?

பூகோளம் காட்டுகிற பொதுத் திசைகள் கிடக்கட்டும்; பூபாளம் பாடிஇனிப் புதுத் திசைகள் படைப்போம்,வா!

விருப் பங்கள் இழுத்துப் போகும் விதியை ஒதுக்கி விட்டு- புதிய திருப்பங்கள் காண்ப தற்குத் திசைகளைத் தீர்மா னிப்போம்!