பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல் மலம் மறுத άάγωcηθά)

ஏற்றங்கள் தருகின்ற கல்விக் கூடம்

இளம்பயிரின் நாற்றங்கால்; பொதுவாய்ப் பருவ மாற்றங்கள் பயிர்நிலையைத் தீர்மா னிக்கும்; மக்களையும் அதுதானே தீர்மா னிக்கும்? காற்றுகளே திசைமாறி வீசும்போது

கட்டுப்பா டெல்லாமும் காற்றில் போகும்! நேற்றுகளை உணராத தலைமு றைகள்

நாளைகளை இன்றைக்கே காணப் பார்க்கும்.

அறியாத பருவத்தில் அரும்பா முன்பே

அரும்புகளில் தேன்தேடித் திரியும் தம்பி; புரியாத வயதிற்குள் புலன்கள் கெட்டுப்

பூப்பதன்முன் காய்ப்பதற்குத் துடிக்கும் தங்கை தெரியாத திக்குகளில் சுவைகள் தேடித்

திரிகின்ற பிள்ளைகளைத் திருந்த வைப்போம் நெறியாக பால்மணத்தை மறக்க டித்து

நேர்வழியில் நூல்மணத்தை நுகரச் செய்வோம்