பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுமைலை நூடிே திண்டிச்சு...

திருமணச்சீர் கொடுக்க இயலாமல், மணமாகாமலேயே

படைந்த முதிர் கன்னியர் - நகர்ப்புறத்துப் பெண், ா டுப்புறத்துப் பெண் - இருவரின் மனக்குமுறல்கள்.0 'ம ம

ஆசையை நெஞ்சில் எரிக்கின்றேன் - அதை ஆடைகள் கட்டி மறைக்கின்றேன்! 猫 வாசலைத் தென்றல் தொடவில்லை - நான் வசந்த மாலையைப் பெறவில்லை!

காதுப் பொத்தலை மூடவில்லே - என்

கல்யா ணம்கை கூடவில்லே! சீதனம் கொடுக்க ஏதுமில்லே - என் சிரிப்பும் இப்போ மீதமில்லே!

கற்பனை ஆயிரம் இருந்தென்ன - அவை கன்னிக் கொடைக்கு உதவவில்லை! கற்பும் அழகும் நிறைந்தென்ன -ஒரு கணவனை வாங்க முடியவில்லை!

ஒத்தைப் பாய்க்கும் வயசாச்சு - என் உடம்பும் ரொம்பப் பழசாச்சு வெத்துக் கூடா ஆனவநான் - ஒரு விறகாப் போன பூமரம்தான்!