பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரகர் ஒருவர்தான் பெண்பார்க்கிறார் - பிறர் தாம்பூலத் தட்டில்தான் கண்வைக்கிறார்!

கல்யாணப் பந்தலில் பாரடிநீ - அங்கும் கையில் தராசுடன் சம்பந்திகள்!

சீர்கள் தருகிற சாதனங்கள - பெண்கள் சீதனம் சுமக்கிற வாகனங்கள்!

கொட்டிக் கொடுக்கிற சீர்செனத்தி - ஒரு கூண்டுக் கிளியாக மாறுதற்கோ?

கணவன் உறவும் விலைகொடுத்தா - சிறைக் கைதியாய்ப் போகவும் கட்டணமா?