பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விகின்ற பூஞ்சோலை

பகலிரவாய் அழுதழுது பாவை வடித்த கண்ணில்

பாலைவனம் ஈரமானது - இவள் பஞ்சுமணம் பாறையானது!

முகநிலவில் கொலுவிருந்த

குங்குமத்தின் தடயம்கூட

முழுவதுமாய் மறைந்துபோனது - இவள் மூச்சுகளும் கரைந்துபோனது!

மூலையிலே நகர்த்திவச்ச

ஆளுயரக் கண்ணாடி

முதுகைமட்டும் பார்த்திருக்குது - இவள் முழுமனசும் வேர்த்திருக்குது:

காலையிலே பூத்தமலர்

மாலையிலே உதிர்ந்திங்கு

காம்போடு வாடிக்கிடக்குது ஒரு கைசேரத் தேடித்துடிக்குது

எலும்பெல்லாம் விறகாகி

தசையெல்லாம் தீயாகி

எரிகின்ற பூஞ்சோலைக்கு -வெறும் ஈரச்சேலை போர்வை எதுக்கு?