பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுவமைதி

எங்கள் இந்தியத்தாய்,

என்றும்நீ சுமங்கலியாம்!

இங்குன் பெண்கள்.சிலர்,

இளவயது விதவைகளாம்!

முத்தாக உனக்குமட்டும்

மூவர்ணப் பேராடை,

உத்தமியுன் மகளுக்கோ,

ஒருவண்ணச் சீராடை!

நந்தவனம் குடியிருந்த

நங்கையிவள் கூந்தலுக்கு

எந்தவன மும்இன்று

ஏன்பூக்க மறுக்கிறது!

இலையுதிர் காலம்தான்

இவளுக்கு நிரந்தரமா?

நிலையாய் வசந்தத்தின்

நிழல்வந்து படியாதா?

நேரடியாம் முதலடியை

நெருப்பு விழுங்கியதால்,

ஈரடி வெண்பாவில்,

ஈற்றடியே எஞ்சியது!