பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளுத்த வடிவில்

கனிமரம் ஒன்று தனிமரம் ஆனதே

காப்பது நம் கடமையல்லவா?

விதவை என்று விலக்கி வைப்பது சிதை வைப்பதற்கா? சிந்தித்துப் பார்நீ!

விதவை வாழ்வுமலர விதை - ബബ;

புதிய வ்ழிசெய்; புறப்படு தோழனே!

எருக்கம் பூவினைச் சூடிடக் கூட இறைவன் இருக்கிறான் - மனித வருக்கம் வளர்க்கும் வெள்ளைப் பூவிது வாடிடலாமா? செம்மலராக்கு!

கணவனின் மறைவெனும் சாவின் சலவையில் வெளுத்த வானவில்; அதில் வண்ணங்கள் ஏற்று - புதிய

வாழ்வினில் தேற்று!