பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறுபடி ஓர் ஆகஸ்டு ரட்சி

தெள்ளமுதாம் இல்லறத்தை இழந்த தாலே, திருமதிகள் பிறைமதிகள் ஆகிவிட்டார்; உள்ளத்தில் துணையிழந்த துயர வெள்ளம்; உடல்மீது வெள்ளாடை துக்கச் சின்னம்! வெள்ளையர்கள் விடுதலையைத் தந்தார்:இந்த வெள்ளையர்க்கு விடுதலைநாம் தரவேண் டாமா வெள்ளிகளைத் தொடரும்சனி பெயர்ந்தால் தானே வெள்ளிகட்கு விடிவெள்ளி தோன்றக்கூடும்?

கண்ணற்ற மயிலுக்குத் தோகை மீது கண்நூறு இருந்தாலும் பார்வை உண்டா? எண்ணற்ற சமாதான வெண் புறாக்கள் இவர்வாழ்வில் அமைதிக்குத் தூது உண்டா? "வெண்மேகம் உடுத்திருக்கும் செவ்வானங்கள் விரைவிலொரு 'வானவில்லை அணிய வைப்போம் மண்மீது வெள்ளைகளை அகற்று தற்கு மறுபடியோர் ஆகஸ்டு புரட்சி செய்வோம்!