பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெளடீகப் பழக்க வழக்கங்களையும், மேல் வர்க்க ஆதிக்கத்தையும், சுரண்டலையும் சாடி எதிர்ப்பதில் சத்திய ஆவேசம் கொண்டிருப்பவர்.

இவர் மாதிரி கவிதைகள் எழுதினால், மரபுக் கவிதைகளை அல்லது மரபுக் கவிஞர்களை யார் எதிர்ப்பார்கள்?

மொழி வளம், கற்பனை நயம், சமூகப் பார்வை, பிரக்ஞையுடன் கூடிய சீற்றம் எல்லாம் இணைந்து - இணக்கமாகி, இவரை ஓர் இணையற்ற கவிஞராக ஆக்கியிருக்கின்றன:

இன்றைய சமுதாயப் பிரச்சினைகளை எதிர்த்துப் போரிட ஒரு புரட்சி விழிப்புத் தேவைப்படுகிறது என்பதில், யாருக்கும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.

எளிய சொற்களால் எழுச்சியூட்டும் இவரது கவிதை வரிகளில் - மொழி வளர்ச்சிக்கும், சமுதாய மேம்பாட்டிற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும், உலக சமாதானத்திற்குமான உரத்த சிந்தனைகள் தெரிகின்றன.

தாராபாரதி, தம் கவிதைக் கைளால் இந்தத் தரணியைத் தட்டி எழுப்புவதைத் தலையாய கடமையாய்க் கொண்டிருக்கிறார்.

ஒரு யுக விழிப்பை ஏற்படுத்துவதே இவரது

இலக்காக இருக்கிறது. அந்த முயற்சியில் இவருக்கு வெற்றிகளும் வாய்த்து வருகின்றன!