பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெல்லைல்டிடில்

சீதையை எரிக்க ராமன் வில்லே விறகாய் ஆகிறது; சீதன மின்றித் தாய்வீடே சிலர் சிறையாய் மாறியது!

சிதையில் எரியும் சீதைகள் இவர் சிறகுகள் தானா விறகுகள்?

கனவுகளோடு மூன்று முடிச்சைக் கழுத்தில் ஏந்தியவள் - கண்ணிரோடு ஒரு முடிச் சில்தன் கதையை முடிக்கின்றாள்!

தாலிக் கயிற்றில் தண்டனை - ஒரு தூக்குக் கயிற்றில் விடுதலை!

மண்ணெண்ணெய்க்குப் பெண்ணெண்ணெய். மற்றொரு பெயருண்டா? மருமக ளுக்கு எரிபொருள் என்றொரு மாற்றுப் பொருளுண்டா?

தென்றல் தொடாத அரும்புகள் - சிறு

தீக்குச் சிக்கா விருந்துகள்?