பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aல் மதம் மல்மதம்?

பூப்பறி யாத பருவத்தே பொதுமக ளாகப் போனவள்நான்; யாப்பறி யாத கவிதையென்னை

யார்யார் யாரோ வாசித்தார்!

எல்லாச் சாதியும் தீண்டுகிற எச்சில் சாதி என்சாதி; எல்லா மதமும் கலக்கின்ற 'என்மதம் மன்மதம் இன்பமதம்!

இனிப்புக் கடைநான் தசைப்பிண்டம் எத்தனை பேர்க்குத் தின்பண்டம்; குனிந்து வருகிற நீதிபதி குற்ற வாளியும் அடுத்தபடி,

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி அத்தனை பேரும் என்கட்சி; நாளும் பொழுதும் கிடையாது; ஞாயிறு விடுமுறை எனக்கேது?

தனயன் நுழைய முன்வாசல் தந்தை நழுவப் பின்வாசல்: முனிவர் களுக்கும் முறைவாசல் மூடா திருக்கும் என்வாசல்:

கவிஞாயிறு