பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றுப் படிைக்கு ஒரு வால்

நோவான் ஏழைகொடும் பசியால் - குடல் நோயால் பட்டினிக்கு இரையாய்! போவான் தினமும்தெருத் தெருவாய் - ஒரு பொழுதிலும் போதாத வருவாய்!

சோற்றுப் பானைக்கு ஒருவாய் - அதைச் சுற்றிப் பகிர்ந்துண்ணப் பலவாய்! ஆற்றிக் கொடுத்தசிறு உருண்டை - பிஞ்சு ஆகா, கோலியென விழுங்கும்!

'எனக்குக் கவளம்ஒரு பந்தாய் - என ஏந்தும் கைகளுக்குப் பங்காய் -

கணக்குப் பார்த்துத்தான் தந்தாள் - சிறு கவளம் அல்ல; வெறுங் கஞ்சி! கணவன் கைகளுக்குப் பங்காய் - தன்

கண்ணித் துளிகளையே வார்த்தாள்!

கனக்கும் இரண்டிதயம் துடிக்கும் - வெற்றுக் கலயம் தலைகவிழ்ந்து கிடக்கும்! தனக்கும் வெறும்வயிறு என்றா? - சுற்றித் தவிக்கும் வயிறுகளைக் கண்டா?