பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேகப் பருத்தில் மேலாடை

மண்மகள் காதலியின்

மலைமார்பு களுக்கு,

வெண்மேக மேலாடை

விரிக்கின்ற வானமே!

எங்கள் சகோதரிகள்

ஏராள மானவர்கள்,

அங்கம் மறைப்பதற்கு

ஆடையின்றி வாடுகிறார்!

சேலை கூட இல்லை;

சிற்றாடை கேட்கின்றார்;

ஆலைப் பருத்திகளும்

அதைத்தர மறுக்கிறதே!

தேகத்தை மூடுதற்குத்

திறமில்லை; வானம்நீ

மேகப் பருத்தியினால்

மேலாடை நெய்துகொடு!

கார்மேகத் தில்.மீண்டும்

கண்ணன் அவ தாரம்எடு!

நீர்சுரக்கும் உன்னிடத்தில்

நிழலாடை சுரக்கட்டும்!

மேகங்க ளேனும்

மெய்யாய் 'மயில்களுக்கு பேகன் களாகிப்

போர்வை வழங்கட்டும்!

&

&