பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:് o

o

o:

எட்டயபுரத்துக் கவிஞன், தன் எழுதுகோலில் விட்டுவைத்த மையின் மிச்சத்தை என் எழுதுகோலில் நிரப்பிக்கொண்டு எழுதுகிறேன்.

எளிமை எனக்குப் பிடிக்கும்; என்னைப் போலவே என் கவிதைக்கும் மனித நேயத்தின்மீது என் எழுதுகோலுக்கு விருப்பம்; அதைப்போலவேஎனக்கும். நான், சில இலட்சியங்களோடு நடக்கும் மனிதன்; தரமான இலக்கியங்களைப் படிக்கும் சுவைஞன்; சமதர்மக் கவிதைகளைப் படைக்கும் கவிஞன்.

தமிழில் எழுதும்போது எனக்குள் மகிழ்ச்சி ததும்புகிறது.

ஆனால், இன்று தமிழின் நிலை கண்டு என் மனம் வெதும்புகிறது. சொந்த மொழியைப் பாதிக்கும் சோற்று மொழிகளின் ஆதிக்கம், சந்தி முனையெங்கும் சர்வாதிகாரம் செய்கிறதே!

தமிழில் கல்வி என்பது அறுகி, கல்வியில் தமிழ் என்று குறுகிப் போயிற்றே!

வாழும் தமிழ், தாழும் தமிழாகி வருவதைத் தடுத்து, வளரும் தமிழாக்க ஒரு நூறு இளைஞர்கள் உடனடியாகத் தேவை... என் கவிதைகளால் அவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க முயல்கிறேன்.

வானம் திறக்கும் சூரிய வாசலில் நின்று கொண்டு என் தேசத்தைப் பார்க்கிறேன்...