பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!

இது எங்கள் கிழக்கு

எங்களது கிழக்கு -அது எந்தப் பக்கம் இருக்கு?

சின்ன இருட்டுகள் விலகவில்லை - அந்தச் சிவப்புச் சூரியன் வரவுமில்லை! இன்னும் பொழுது விடியவில்லை அட எதுகிழக் கென்றே தெரியவில்லை!

எங்களது கிழக்கு - அது எந்தப் பக்கம் இருக்கு?

விழிக்கும் நேரம் வந்தபின்னும் - நம் வீதியில் வெளிச்சம் நுழையவில்லை! கிழக்கு தானாய் வெளுக்காது -அதைக் கிழிக்கா விட்டால் சிவக்காது!

எங்களது கிழக்கு - அது எந்தப் பக்கம் இருக்கு?

இருண்டு கிடக்கும் திசையெதுவோ அதில் இரத்தப் பொட்டு வைப்போம்வா! இரத்தப் பொட்டே செம்பரிதி - நாம் இதையே கிழக்கென அழைப்போம்வா!Please give பொருள் for 𝙠𝙖𝙫𝙞𝙩𝙝𝙖𝙞.