பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டை விலே... கட்டை விலே...

தொழிலாளத் தோழனே, தொண்டின் சிகரமே! உழவு உன்படை, தொழில்உன் நன்கொடை!

சுழலும் பூமியின் சுழற்சி விதியை எழுதி இயக்கும் கட்டை விரல்நீ!

காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதில் கைதேர்ந் ததுதான் முதலாளி வர்க்கம்!

நீர்வீழ்ச்சி போல்நீ கண்ணி வடிக்கிறாய் - உன் கண்ணில் அவனோ மின்சாரம் எடுக்கிறான்!

வெள்ளக் கடல்போல் வியர்வை பாய்ச்சுவாய் - உ வியர்வையில் அவனோ உப்புக் காய்ச்சுவான்!

அவனுக் காகநீ எலும்பை முறிக்கிறாய்; அவனோ பதிலுக்குச் சோம்பல் முறிக்கிறான்!

தனவந் தனது குடும்பத் தேரைத் தண்டு வடத்தால் கட்டி இழுக்கிறாய்!

உதிர நீரை அவனுக்குத் தந்து உமிழ்நீ ரில்நீ உயிர்வாழ் கின்றாய்!

வியர்வைத் துளிகளை விதைத்து விட்டுக் கண்ணித் துளிகளை அறுவடை செய்கிறாய்!