பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதுகில் சுமக்கும் தானிய மணிகள் வயிற்றுப் பக்கம் வருவதே இல்லையே!

பட்டாளி உனது பத்து விரல்களை மேட்டுக் குடிமகன் மென்று தின்கிறான்!

வழிவழி ULIIT 5 முதலாளி இனத்தைத் தொழுது தொழுதே "தொழு(ம்)நோய் பிடித்தவன்!

தோழனே, உன்னைத் தொற்றி யிருக்கும் தொழுநோய் அகலப் போவதெப் போது?

அழுகையை விரட்டு; தொழுகையை நிறுத்து, வழுவழு, உந்தன் தோள்களை உயர்த்து:

| |

மத மின்றிப் புரட்சியை முழக்கு நடைகள் யாவும் தகர்ந்துவிடும்! | ||IDIJ சாதிக்குச் சாமரம் வீசப் பண்ணைச் சாதிகள் பணிந்து வரும்!

குடிசை களுக்குக் கும்பிடு போடக் கோபுரம் தானே குனிந்து வரும்; அடிமைத் தலைகள் மகுடம் சூட அரசர் தலைகள் வணங்கிவரும்!