பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

βολωάη குடிக்காத

தாகமுடன் தவித்திருந்த

வானப் பெண்ணே! தாகத்தைத் தணிக்கின்ற ஆர்வத் தோடு மேகமெனும் தேன்கூட்டில் தேனெடுக்க

மின்னல்களைத் தீப்பந்த மாக்கித் தீய்த்தாய்!

வேகமுடன் வழிந்தமழைத்

தேனில் உந்தன் வேட்கைக்கு ஒருதுளியும் கிடைக்க வில்லை! மோகமுடன் அண்ணாந்து

பார்த்த பூமி முடவனன்றோ முயற்சியின்றி தேன் குடித்தான்!

பாடுபட்டு ஒருவர்க்கம்

உழைக்கும்; அந்தப் பயன்யாவும் வேறுவர்க்கம் உறிஞ்சிக் கொள்ளும்! கூடுகட்டும் குருவியினம்

கூட்டுக் குள்ளே குடியேறும் தந்திரமாய்க் கழுகுக் கூட்டம்!