பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கால்வாய்ப் பாசனத்தால் கழனிகளும் வயிறாறும்! கால்வாயில் நீர்ப்பெருகிக் கரையிரண்டும் வழிந்தோடும்!

கால்வாய்க் கரையோரம் கைக்குவரும் ஆகாரம் கால்வாய்க் கஞ்சிதான்உன்

கண்ணிரும் சேர்ந்ததுதான்!

கல்லிலும் செம்பிலும் கடவுளைத் தேடுகின்றோம்! நெல்லிலும் கரும்பிலும்

நீயவனைக் காட்டுகிறாய்!

வயற்கால்கள் நீவாழ்த்தி வணங்குகிற ஏர்க்கால்கள்! உயிர்க்கால்கள் நடப்பதற்கு உதவுவன உன்கால்கள்!

பயிர்க்கால்கள் தலைவைத்துப் பல்லக்கு சுமக்கும்உன் மயிர்க்கால்கள் அனைத்துக்கும் மகுடங்கள் சூட்டுகிறேன்!