பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகில் இருட்டை வெளிலேற்று

விண்ணைக் குலுக்கு மனிதாநீ ஒரு விண்மீன் கூட உதிராமல்! மண்ணைப் புரட்டு மனிதாநீ சிறு

மண்புழு கூட நசுங்காமல்!

நேற்றைய பகைமை இனியெதற்கு? -உன் நிழலின் மீதா வெறுப்புனக்கு? சோற்றுப் பானையைப் பொதுவில்வை - இனி சுதந்தரச் சுடரை நடுவில்வை!

ஒவ்வொரு முகமும் உறவுமுகம் -உன் ஒவ்வொரு மூச்சையும் அன்பாக்கு! ஒவ்வொரு இதயமும் பகலாக்கு நம் உலகின் இருட்டை வெளியேற்று!

வேற்றுநாடு' என்னாடு - எனும் வேற்றுமை யாவும் தூக்கியெறி! காற்றும் உனக்குக் கைகட்டும் பெருங் கடலும் உனக்குக் கைகொட்டும்!

பகையில் லாத உள்ளங்கள்; பசியில் லாதஇல்லங்கள்! அகிலம் காணும் அக்காலம்; அதுதான் பூமியின் பொற்காலம்!