பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篷

o:

ബു60...

தனி இயற்கை அரசாங்கத்

தலைமைச் செயலகம்நீ!

பணிநிலவும் பகலவனும்

பாடுபடும் வயல்வெளிநீ!

விண்மீன் களுக்கோர்

வேலைவாய்ப் பலுவலகம்;

வெண்மேகக் கூட்டத்தின்

விளையாட்டு மைதானம்!

விஞ்ஞானி களுக்கோர்

விரிவுரைக் கூடம்நீ!

மெய்ஞ்ஞானி களுக்கு

'வீட்டுவசதி வாரியம்நீ!

கண்டம் கடப்பதற்கும்,

கண்காணாப் பல்வேறு

அண்டம் விரைவதற்கும்

அறிவியல் பாதைநீ!

மழைநீ எழுதுகிற

மரபுக் கவிதை, அதைப் 'பொழிப்புரை யாகவே

பூமிக்குத் தருகிறாய்!