பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவர் உலகத்தைத்

தெரியக் கண்டதில்லை;

.!,ി உலகத்தின்

அத்தாட்சி ஆனாய்நீ!

நிலமகளும் நீயும்

நெடுநாள் காதலர்கள்; சிலசமயம் உங்களுக்குள்

சிற்றின்பம் நிகழ்வதுண்டு!

தேவியை நீர்வடிவில்

தீண்டித் தழுவுகிறாய்;

ஆவி வடிவத்தில்

அவளுன்னை அணைக்கின்றாள்!

வெற்றுடலின் தழுவல்கள்தான்

வேட்கையெனக் காட்டாமல்

முற்றும் நூதனமாய்

மோகத்தை விளக்குகிறாய்!