பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலையில் ஆக்கு

நதியே -

ஒரக் கரையிரண்டும் உதடுகளாய்க் காட்சிதர

நீரைச் சுரந்தபடி நீண்டுவரும் மலைநாக்கே!

உன்னுடைய உமிழ்நீர்தான் உவர்க்கடலாய் ஆகியதோ? உன்நாக்கு அலைகடலில் உப்புருசி பார்க்கிறதோ?

நீர்வேட்கை தீர்ப்பதற்கு நெடியமலை தன்னுடைய நீர்நாக்கைக் கடல்வரைக்கும்

நீட்டிக்கொண் டிருக்கிறதோ?

ஊற்றோடும் உன்நாவில் ஓயாத'நீர்ப் பேச்சு’ காற்றோடு நீநடத்தும் கலந்துரை யாடல்களோ?

கன்னியரின் அரைச்சிரிப்பும் கரையோர மரச்சிரிப்பும் உன்னுதட்டு நுரைச்சிரிப்பை உவமிக்கப் போதாவே!