பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகலவன் அருகில் வந்து

பனியாடை தொடுவான்; நாணம் மிகவரும்; உருகிப் போவாய்!

மேலாடை உன்னை விட்டு நெகிழ்ந்திட அருவி என்னும்

நீராடை புனைந்து கொள்வாய்! சுகம்பெறத் தடையி தென்று

சூரியன் சுடுவான் நீரை!

தாயகம் பெருமை கொள்ளத்

தம்புகழ் நிறுவிச் சென்ற தூயவர் வீர வாழ்வைத்

தொண்டினை எழுதிக் கொண்டு நாயகர் தொகுதிக் கிங்கே

நடுகல்நீ, இதனை மற்ற தேயங்கட் குணர்த்து கின்றாய்;

தேசத்தை உயர்த்து கின்றாய்!

முடித்தலை இமய மே,நீ

முடியர சென்பார்; ஆனால், குடியர சிந்த நாட்டின்

குடியாகிக் கொடிசு மந்தாய்! கொடியுன்மீ தசையும் காட்சி

குமரியி லிருந்து கண்டேன்! நெடியஉன் வடிவை எந்தன்

நெஞ்சினில் அடக்கி விட்டேன்!