பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துல்லில் αάκηώθά)

மண்மீது பள்ளங்கள் நிறைய உண்டு; மலைமீதும் பள்ளங்கள் இருப்ப துண்டு; தண்ணிபோய்ப் பள்ளத்தில் தேங்கும்; அந்தத்

தண்ணில் பள்ளங்கள் பார்த்த துண்டா?

மண்மீது தேங்கியுள்ள நீர்ப்ப ரப்பில் மழைச்சரங்கள் காலூன்றி இறங்கும் போது தண்ணில் அங்கங்கே பள்ளம் தோன்றும்; தண்ணிர்மேல் மழைநடக்கும் தடங்கள்

காட்டும்!

கண்ணெதிரே மழை"முத்து நிரப்பி யாடும் கணநேரச் சிறுபல்லாங் குழிகள் ஆகும்! பண்ணிசைக்க மழைக்கரங்கள் தட்டும் போதும் பள்ளங்கள் சங்கீத இசைக்கிண் ணங்கள்!

விண்ணின்று குதிக்கின்ற மழைக்கா லுக்கு விண்ணென்று வலிக்காமல் மெத்தென் றாகி நுண்ணியதாய்க் குழிந்தெழும்பும் தண்ணி மேடை

துரைப்பஞ்சு மெத்தையினும் மென்மை யாக!