பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துளைக்கின்ற மழைக்கம்பி யாவும்நீர்மேல் துரப்பணங்கள் போடுவதேன்? நீரின் ஆழம் அளப்பதற்கா? தண்ணிரைப் பொத்த லாக்கும் அவை'திரவ அம்புகளா? நீர்மேல் போரா?

மளமளென நுரைவெண்ணெய் கடைந்தெடுக்கு. மத்துகளா? நீரடியில் குவிந்தி ருக்கும் வளமான செல்வத்தை அகழ்ந்தெடுக்க வளைதோண்டும் கடப்பாரை முயற்சி தானா?

அலையில்பெருங் குமிழிகளோ கவிழ்த்து வைத்து, அரைக்கோளக் கண்ணாடிக் குடங்கள்; அந்த அலைநீரை முகந்தெடுக்க முயற்சி செய்து ஆற்றலில்லா அரைக்குடங்கள் உடைந்து போகும

மிகச்சிறிய நீர்க்குமிழிக் கூட்டம் யாவும் 'மிதக்கின்ற முத்துகள்போல் தோன்றக் காற்று வெகுவிரைவாய்ச் சேர்ந்தெடுக்கச் செல்லும், தொட் வேகத்தில் அவைநொறுங்கத் திகைத்து நிற்கு.