பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வற்றல் பரம்பரை

மனிதா,

கையில் எதற்குக் கோடரி அதன் காம்பில் பார்என் முகவரி: வெயில், கொஞ்சம் அருகில்வா - என் வேண்டு கோளினை வைக்கவா?

மரக்கறி யாகப் பலன்தரும் - இந்த மரம் கரி யாகியும் பயன்தரும்! மரத்துப் போனதா உன்மனம் - அட மரித்துப் போகவா எம்மினம்?

கார்பன் நஞ்சை விழுங்கியே - உயிர்க் காற்றை உனக்குத் தருகிறேன்! யாருன் பசியைப் போக்கினார் - உணவு யாசகம் என்னிடம் பெறுகிறாய்!

அமரவாழ்வு நான் பெற்றபின் - நீ அமர இருக்கைகள் தருகிறேன் நிமிர நடக்கநீ வண்டிநான் - நாளை நீட்டிப் படுத்தால் பெட்டி நான்!

இடுப்பைச் சுற்றி உடுப்புகள் - எங்கே எரியும் சோற்று அடுப்புகள்? கொடுக்கும் வள்ளல் பரம்பரை - என் கொடையில் தான் உன் பரம்பரை!