பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உற்றுப் பரப்பில் οοιάγω ηωία!

சுற்றுப் புறத்தைச் சுற்றிப்பார் - அட சூழல் கெட்டுக் கிடப்பதைப்பார்! சுற்றம் தழுவ ஒப்புரவு - நம் சுற்றுச் சூழலில் துப்புரவு!

இரண்டும் குறைந்தால் உள்ளும் புறமும் எத்தனை எத்தனை தொந்தரவு? துரும்பும் தூசியும் புகையும் மிகுந்தால் தூய்மை வாழ்வில் பின்னடைவு!

கரிப்புகை கக்கும் வாகனங் களுக்குக் காற்று மண்டலம் கழிப்பி டமா? திறந்த வெளியில் ஆலைக் கழிவுகள் தேக்கிய திரவக் குப்பைகளா?

நாலு கால்களின் நகல்கள் ஆகி நம்மவர் நடத்தும் தினக் கடன்கள்; காலை மாலை சாலைச் சந்திகள் கட்டண மில்லாக் கழிப்பிடங்கள்!