பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றைச் കു കd)

சூரியக் கோளம் அழுக்கானால் அதைச் சுத்தப் படுத்தும் உன்வியர்வை!

தூரக் கிழக்கு வான்பரப்பில் - மிகும்

தூசியைத் துடைக்கும் உன்கைகள்!

நிலவின் கறைகள் துடைக்கப்போ -அங்கு

நிழல்தரும் மரங்கள் வளர்க்கப்போ!

உலகத் தரையைக் கழுவிவிடு -முதலில்

உனது நகத்தின் அழுக்கையெடு!

நாளும் கழிவுக ளால் நாறி-நஞ்சாய்

நீளும் நதிகளைக் குளிப்பாட்டு;

கோளும் விண்மீன் தொகுதிகளும் -உன்

தோளை வலம்வர வழிகாட்டு!

நல்ல காற்று மண்டலமும் - தினம்

நச்சுத் தன்மை படிகிறதே!

உள்ளெழும் மூச்சுக் காற்றாலே - நீ

உலவும் காற்றைச் சலவைசெய்!

சுற்றுச் சூழலைக் கட்டுப்படுத்த -உன்

மக்கள் தொகையை மட்டுப்படுத்து!

சுற்றம் தழுவு; சுற்றத் தோடு

சுற்றுச்சூழல் சுத்தம் தழுவு!