பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

發

முழுமதில் பிறைநிலவு

பொன்னி நதிக்கரையில்

பூக்குலங்கள் அணிவகுக்கும்;

கன்னி இளமங்கை

கைநிறைய மலர்கொய்தாள்!

'பூந்தோட்டம் யாருக்குப்

பூப்பறிக் கிறதென்ன்றேன்;

மாந்தளிர் திரும்பி,

மையலுடன் நகைத்தாள்!

'முழுநிலவு பாருங்கள்!"

முறுவலுடன் காட்டினாள்; 'முழுமதியில் பிறைநிலவு

முளைக்குமா? எனக் கேட்டேன்!

புரியாமல் நின்றாள் என்

புதிரைக் கேட்டுவிட்டு;

தெரியாத பெண்ணுக்குத்

தெளிவுரை தந்தேன்நான்!

தோன்றும்உன் இனிய முகம்

தூய முழு நிலவாகும்;

மூன்றாம் 'பிறை'யுந்தன்

'முறுவலிலே உருவாகும்!