பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

qல்மேவும் விழி0ால்கள்

கண்கள் அருகே இமைமயிர்கள் கரும்புல் லாகக் காட்சிதர கண்ணிமை வரப்பில் நுனிப்புல்லைக் கடித்துப் பார்த்த விழிமான்கள்,

உண்ணுவ தற்குச் சுவையில்லா உப்புப் புல்லெனத் துப்பிவிடும்; உண்ணுவ தற்குத் தெவிட்டாத

உணவைக் கண்டதும் துள்ளிவரும்!

விரையும் பார்வைப் பசிதீர விருந்து படைக்கும் காதலனின் விரிந்த மார்புப் புல்வெளியில் விழிமான் இரண்டும் புல்மேயும்1

அருகில் நாணம் வரக்கண்டு அவசர மேய்ச்சல் முடித்தோடும்;

புருவ நிழலில் அமர்ந்தபடி புல்வெளி விருந்தை அசைபோடும்!