பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானும் நீயும் நாம் ஆனோம் - ஆம் நாமில் இருவர் ஒன்றானோம்; தேனே இதனால் நமக்குள்ளே - தினம் தினமும் சிந்தனை ஒன்றாகும்!

"புதிய விடியல் உன் கழுத்தில் - நான்

புனிதத் திருநாண் அணிவித்தேன் -என்

தயத் திற்குத் தாலிகட்டி - இது

‘என்னுயிர் முடிச்சு எனச் சொன்னாய்!

ஒரித யத்தின் இயக்கத்தில் - நம்

உடல்கள் இரண்டும் உலவிவரும்!

யாருடல்? யாருயிர்? எனக்கேட்டால் நம்

ருவர் விடையும் ஒன்றாகும்!

அத்தான் என்கிற உச்சரிப்பால் - என் ஆயுளை நீட்டி நிச்சயித்தாய்! எத்தனை எத்தனை பணிவிடைகள் - இதில் எனக்கு நீயும் இன்னொருதாய்!

மலரே நீயென் உயிர்வாழ்க்கை - என் மனமே உனக்குக் காணிக்கை!

உலகே மறந்து போகிறது - அடி உன்முகம் தரிசனம் தரும்பொழுது!

யுகங்கள் கோடி ஆனாலும் - நம் முகங்கள் நமக்கு மறந்திடுமோ? யுகங்கள் நமக்கொரு இடைவெளியா? - இந்த உலகம் நமக்கொரு பெருந்தடையா?