பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவை - சிலர் துறவு...

முரசறையும் அழகு சிலை,

பருவ மேனி; மோகனத்தை வாகனமாய்க்

கொண்ட பாவை! அரசியிவள், வேசியரில்

'அல்லி என்னும் அழகியிவள்; பழகுபவர்

கையில் வீணை!

சரசமிவள் மதுரகலை;

பருவத் திண்ணை; சமதர்ம இரவுகளை

வளர்க்கும் கன்னி! விரசமிவள் விழிமூலம்;

இவள்தான் மற்ற விதிகளும் தொடுகின்ற

ராஜ வீதி!

இதமான இளவேனில்

மாலை நேரம்; இனியதொரு சோலையிலே

அழகு மங்கை விதமான மலர்கொய்து

நின்றாள்; அந்த வேளையிலே 'இளந்துறவி

அங்கு வந்தான்!