பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிதமான உணர்வுகளை நெறிப் படுத்தி, மெய்ம்மையினைக் காண்பதற்கு முயல்வோன்; தன்னைப் பதமாகத் தன்மடியில்

வீழ்த்தப் பார்ப்பாள்; பாவைமயில் ஆட்டத்தைத்

தொடங்க லானாள்!

'உன்வரவு, நல்வரவு!

என்றாள், அல்லி, உத்தமனோ சலனமின்றிச்

சிரித்தான் மெல்ல! "என்வரவால் உனக்கெந்த

வரவும் இல்லை' எனவிரித்தான்; இளமங்கை

வலை விரித்தாள்!

‘என்னுடலின் உறுப்பிலக்

கணம் படிப்போர்

எல்லார்க்கும் பகுபதம் நான்

என்றாள்; துறவி,

சின்னவளே நானென்றும்

s 'பகாப் பதம்தான்,

சிந்தையினைக் கட்டிவைத்த

தாலே என்றான்!