பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'நெய்வதற்குத் தானிங்கு

நூல்என் றாலும் நெசவுகளை விரும்பாமல்

ஒதுங்கி வந்த தையல்நூல் நான் என்றான்;

கன்னி, இந்தத் தையலுக்கு உதவாத

நூல்தான், என்றாள்!

'மனங்கெட்டுப் பின்திருந்த

முயலும் மாந்தர் மனக்கிழிசல் தைப்பவன்நான்;

எனது வார்த்தை, மனந்தொட்டுத் தன்னளவில்

உணர்ந்தால் போதும்; மறுபடியும் நல்வாழ்வு

மலரும்; மனித

இனங்கெட்டுப் போகாமல்

காப்ப தற்கு என்போன்றோர் சிலர்துறவு தேவை என்றான்! தினம்கெட்டுப் போனவளும்

இதனைக் கேட்டு 'திருந்துதற்கு முயலுகிறேன்

என்று ரைத்தாள்!