பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

© @ ரேடிடர0

அன்னியன் அன்று பாரதச் சுவரில் சுண்ணாம் பைத்தான் சுரண்டி யெடுத்தான்!

சுதேசிகள் இன்று சுதந்தர வீட்டின் சுவர்களை அல்லவோ களவா டுகிறார்!

வேர்களே மரத்தின் கனியை விழுங்கும்;

விரல்களே உள்ளங் கையைச் சுரண்டும்!

பொதுமக் களுக்குப் பழகிப் போனதால் சுதந்தரம் என்பது சுரண்டறம் ஆனது!

எங்கும் எதிலும் சுரண்டறம்' நாட்டில் இதுதான் எங்கள் இன்பச் சுதந்தரம்!

மக்கள் தலைவர்கள் நாக்கை விற்கிறார்;

மக்கள் தங்கள் வாக்கை விற்கிறார்!

உமிக்குச் சுண்ணாம் படித்தால் உடன்.அது சமையல் அறைக்கு அரிசியாய் விடுமா?

ஊர்வலம் போகும் ஒப்பனை உமிகள்! தேர்வடம் பிடிக்கும் விதைநெல் மணிகள்!