பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஓட்டைக் கொடுத்து ஆண்டி யானதால்

ஒட்டாண்டி களாக வாழுகின் றார்கள்!

சில்லரைச் சத்தம் சிறிது கேட்பினும் கல்லறை களுக்கும் கைகள் முளைக்கும்!

வெளியூர்க் கஜினி சிலையை உடைத்தான்!

ள்ளுர்க் கஜினி உண்டியை உடைக்கிறான்!

இனக்கொலை கொள்ளை கற்பழிப் பென்பவை இந்தியர் வீர விளையாட் டுக்கள்!

புரட்டல் கடத்தல் பதுக்கல் பாரதப்

புத்திரர் களுக்குப் பொழுது போக்குகள்!

இருட்டில் எங்கள் தேசப் பார்வை திருட்டை மறைக்கவும் தேசியப் போர்வை!

தரவும் பெறவும் தடைகள் இல்லை; இரவும் பகலும் இடைவெளி இல்லை!

உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் உடல்களின் கொழுப்புச் சக்தியைக் குறைக்க வேண்டும்!

சமதர்ம வைத்தியம் சரியாய் இருக்கும்; சமத்துவ மாத்திரை இதற்குப் போதுமே!