பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரைமொழி களுக்குள் மூத்தவளே

தான்மூப் படைந்தும் இளையவளே! வரைமுறை வைத்துக் காப்பவளே

வளர்மொழி இன்றேன் தளர்கின்றாய்? உரைநடை, கவிதை இரண்டும் நீ

உடுக்கும் ஆடைகள்! அவ்வுடையை அரையாய்க் குறைத்தது கதையுலகம்; அதையும் பறித்தது கவியுலகம்!

தலைமை ஏற்கும் தமிழ்மகளே!

தமிழ்ப்பத் திரிகை எழுத்துகளில் தலைவி உன்னைத் தனியாக

தரிசனம் செய்ய முடிவதில்லை! தொலைதே சத்து வேற்றுமொழித் தோழியர் கூட்டம் சூழ்ந்துவர தலைவி உலவி வருகின்றாய்;

தனியே காண்பது எந்நாளோ?