பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல்நாள் மேம்பாலம்;

மூன்றாம்நாள் தரைப்பாலம்! புதுக்கிணறு சுரக்குமுன்பே புதைகிணறாய் வாய்மூடும்!

காலையில் திறந்து வைத்த கட்டடம் பழுதாகி மாலையில் மறுபடியும் மராமத்து நடக்கிறது!

கற்கோட்டை தன்னுடைய 'கட்டுமானம் தளர்ந்ததனால் தற்கொலை செய்துகொண்டு 'தன்மானம் வெளிப்படுத்தும்!

நெடுநே ரமாக நிற்பதற்கு இயலாமல் கடைக்கால் வலியெடுக்கக்

கட்டடம் உட்காரும்!

ஊதினால் உதிர்ந்துவிழும் உமிக்கூடு; காற்றுவந்து மோதினால் முறிந்துவிழும்

முருங்கை மண்டபங்கள்!

சத்தமாய்த் தும்மினாலும் சரிந்துவிழும் மேற்கூரை, மெத்தென்று நடந்தாலும் மிகநெளியும் சமதளங்கள்!