பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q - இறங்கல் CJA

விலைவாசி யெனும் கரும்புள்ளி;

வியாபா ரத்தில் பெரும்புள்ளி!

மலைவா சியது இன்றைக்கு

மறுபடி வருமா மண்ணுக்கு?

பெரும்புள் ளிகளார்? ஊருக்குள்

பிரமுகர்; அவரைப் பின்தள்ளி

வெறும்புள் ளிகளாய் ஆக்கியது;

வென்றது விலைவா சிப்புள்ளி!

கைப்பணம் தந்து பைப்பையாய்க்

கடைப்பொருள் பெற்றது அக்காலம்

பைப்பணம் தந்து கைப்பொருளாய்ப்

பண்டம் பெறுவது இக்காலம்!

கடைத்தெரு விலைக்கு முறைக்காய்ச்சல்

காலையும் மாலையும் வருகிறது!

நடுத்தர வர்க்கம் மிகத்தேய்ந்து

நடுத்தெரு வர்க்கம் ஆகிறது!

மயங்க வைக்கும் விலை மகளே!

'மலிவு விலையில் எமைச்சேரத்

தயங்கி அகல்வாய்; வணிகர்களின்

தனலா பத்தில் வைப்பாவாய்!

மலையுச் சிக்குப் போனவளே!

மண்ணில் இறங்கி வந்துவிடு;

நிலையைச் சொல்லி வேண்டுகிறோம்

நெஞ்சம் இரங்கு நீ இறங்கு