பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tதுலகமல்ல... மதுவுகம்!

தேசம் முழுதும் வற்றா நதியாய்த் தீர்த்தம் நடக்கிறது; தேசிய கீதம் பாடும் போதும் திரவம் மணக்கிறது!

மழைநீர் அதுவும் கள்மழை யாகி மண்ணை நனைக்கிறது; மழலை வாய்க்குத் தாய்ப்பால் கூட மதுவாய்ச் சுரக்கிறது!

படிக்கப் போகும் வயதில் பிள்ளை குடிக்கப் போகிறது; குடித்து விட்டுப் பாடம் சொல்லக் குருகுலம் வருகிறது!

சாரா யத்தில் மிதத்தல் விதி யைச் சரிபார்க் கின்றார்கள்:

ஏரா ளம்பேர் 'ஆர்க்கி மிடீ'சாய் இதிலே மூழ்குகிறார்:

கள்ளுப் பானை கல்வித் தேனைக் காய்ச்சித் தருகிறதா? கல்விச் சாலைப் பாடத் திட்டம் கள்ளுக் கடைகளிலா?