பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோப்பைக் குள்ளே யாப்பைத் தேடும் மரபுப் பட்டாளம்; கோப்பையும் யாப்பையும் சேர்ந்தே உடைக்கும புதுக்கவிதைக் கூட்டம்!

மேட்டுக் குடியும் பள்ளக் குடியும் மிதக்கும் தேனாறு: பேட்டை தொடங்கிக் கோட்டை வரைக்கும்

பெருகும் பாலாறு

மண்குடங் களுக்கும் பொன்குடங் களுக்கும் மதுக்குடம் கூட்டாளி; மன்னர் சபைகளும் மந்திரி சபைகளும்

மதிக்கும் விருந்தாளி:

மதபோதகரும் மதுபோ தையிலே மறைகள் ஒதுகிறார்; அதுவே ஆண்டவன் ஆரா அமுதென அடியவர் ஆடுகிறார்!

வாக்குப் பெட்டி மதுப்புட் டிக்கு வாழ்க்கைப் பட்டிருக்கும்; காக்கும் சட்டமும் காவலும் இதற்குக் கட்டுப் பட்டிருக்கும்!

தரும தேவதை குடிமயக் கத்தில் தராசு பிடிக்கின்றாள்; சிறுமை கண்டு பாரததேவி சிந்தை துடிக்கின்றாள்!