பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைகள் காடுகள் பண்ணை வயல்வெளிகள் சோலைகள் தோப்புகள்

சோர்வின்றிச் சுழன்று வந்தேன்

ஆலயங்கள் மடங்கள் அறநிலையம் மணக்கூடம் காலிமனை அத்தனையும் கண்ணோட்டம் விட்டேன்நான்

அழுக்குப் படாத நிலம் அங்குலமும் தேறவில்லை!

முழுக்கச் சுற்றிவந்து மூச்சுத் திணறியது! 'அழுக்குப் படாத நிலம் அகப்பட்டு விட்டதா?

அகப்பட்டு விட்டது! அதிசயமாய் இந்தியாவில் அகப்பட்டே விட்டது!

அதோ, தெரிகிறதே!

'எவ்விடத்தில்? எங்கே? எத்தனை சதுரம்?

ஒவ்வொரு ஊர்தோறும் ஒதுக்குப் புறமாக 'அழுக்குப் படாத ஆறடிப் பூமி!