பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேய்ப்பவர் துயிலும் மேடுகள்; மெழுகுகள் அழுகிற மேடைகள்! சாய்ந்த மறிகளின் பட்டிகள்;

வங்களின் சிமெண்டுச் சட்டைகள்!

நிரந்தர ஓய்வுக் குடில்கள்மேல் நிற்கும் நினைவுச் சிலுவைகள் இறந்தவர் 'உள்ளே என்பதை எடுத்துரைக் கும்பெயர்ப் பலகைகள்!

கருகிற் கமைந்த நிழற்குடை, சரிந்த சமதளக் கோபுரம்! வெறுமைக் கிதுவொரு அறிமுகம்; வெற்றிடத் துக்கொரு விளம்பரம்!

இருண்ட வீட்டின் முகவரி; எலும்பு நகைகளின் பெட்டகம்; உருண்டை அல்ல இவ்விடம் 'உலகம் ஆறடிச் செவ்வகம்!

தாலாட் டுகளின் எதிர்ப்பதம்; தரைக்கீழ் அமைதிக் காப்பகம்! காலா வதிகளின் எருக்குழி; கால தேவனின் மிதியடி!

மண்ணடி மைந்தரின் அரண்மனை மயான புரத்தில் எத்தனை? மண்ணில் கண்டம் ஏழுதான்; மயான காண்டம் ஒன்றுதான்!