பக்கம்:கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஸ்லே முறுைக்காத கிழக்கு?

புறவெளிச்சம் கருக்கொள்ளா

மலட்டுக் கண்கள்; பொலிவிழந்த முகத்தில் இரு

பூச்சி யங்கள்!

பொறியிழந்த என் வாழ்க்கைச் சரித்திரத்தில் பூகோளம் பார்த்தறியா விழிக்கோ ளங்கள்!

கற்பனைகள் எனக்குண்டு

வடிவம் இன்றி!

கனவுகளும் வருவதுண்டு வண்ணம் இன்றி!

கற்றவைகள் நெஞ்சிலுண்டு

காட்சி இன்றி; கலங்குகிறேன் பார்வைக்கு

மீட்சி இன்றி!

சுரக்கின்ற கண்ணிதான் இருப்பு நானோ சூரியனே முளைக்காத கிழக்கு!

சலனமிலாச் சவப்பார்வை;

சூனி யத்தில் சஞ்சரிக்கும் விழிப்பாவை உயிர்க்கச் செய்வீர்!